நிலாக்கள்

வேறுநிலா தேடிக்கா தல்வீதி தன்னிலைந்தேன்
வான்நிலாவே மீண்டும் எனக்கு
வேறுநிலா வாகூறு யார்நீசொல் இங்கே
இவளிருக்க நீயும் எதற்கு
கண்ணில் நிலாயிவள் என்கவிதை தன்நிலா
விண்ணிலா நீயேன் எனக்கு
பால்நிலா தேயும் பருவநிலா காய்ந்திடும்
கண்ணீரில் வாடுமுள் ளே
வான்நிலாவும் பெண்ணும் தெவிட்டாதேன் என்றேன்
கசந்ததேன் சொல்லிடு நீ
---கவின் சாரலன்