மீனாட்சி முதிர் கன்னி
கணவனாக வரப்போகும்
யாரோ ஒருவருக்காக
என் காதலை பாதுகாக்கிறேன்,,,
அவனுக்கே நான்
மனைவியாக வேண்டும்
என்ற ஆசையில்,,,
நட்பு பிடிப்பதில்லை
நாட்களும் நகர்வதில்லை
நாளை கணவனாக
வரப்போகும் கற்பனை
காதலனை நினைத்திடுகையில்,,,
எனக்காக வாழப்போகும்
அவனுக்காக இன்றிலிருந்தே
செலவழிக்காது
சேமித்து வைக்கிறேன்
என் ஒட்டுமொத்த அன்பை,,,
இதற்கிடையில் அடிக்கடி
வந்து போகும் அவன்
நினைவுகளை மோகம்
என்று சொல்லி முகம் மலர்வதா?
அல்லது காதல்
என்று சொல்லி கர்வம் கொள்வதா?
அல்லது ஆசை
என்று சொல்லி கர்வம் கொள்வதா?
வினாவை எழுப்பியவாரே
கண்ணாடி முன் கனவு
காண்கிறாள்
எதிர்வீட்டு முதிர் கன்னி..............!!!!!!