காதலர் தினம் தேவையா

காதலர் தினம் தேவையா?
============================


மேனாட்டாவரின் கலாச்சாரத்திற்கு
நமக்கு பைத்தியகாரத்தனமாகத் தெரியும்
தினங்கள் எல்லாம் பொருத்தமானவைதான்.
=
பொது இடங்களிலும்
அரைகுறை ஆடைகளில்
சுற்றித் திரிவதும்
ஆணும் பெண்ணும்
கூச்சம் சிறிதுமின்றி
கட்டியணைப்பதும்
முத்தமிட்டு மகிழ்வதும்
=
பள்ளிச் சிறுமிகளும்
கர்ப்பிணிகள் ஆவதும்,
கடமையைப் புறக்கணித்து
பெற்றோரை
முதியோர் இல்லத்துக்கு
அனுப்பி வைத்து
ஆண்டுக்கு ஒருமுறை
பெற்றோர் தினம்
கொண்டாடுவதும்,
=
சேற்றில் புரளும் திருவிழா,
சாலைகளில்
தக்காளிப் பழத்தைக் கொட்டி
வீசியடித்து சேதப்படுத்திக்
கொண்டாடும் திருவிழா,
=
பெருங்கூட்டம் கூடி
தலையணைய வீசி அடித்து
பஞ்செல்லாம் பறக்கக்
கொண்டாடும் திருவிழா,
=
இதற்கெல்லாம
சிகரம் வைத்தது போல்
காதலர் தினம் என்று
பாலுணர்வைத்
தூண்டுவது போன்ற
நிகழ்வுகளைப்
பொது இடங்களிலும்
அரங்கேற்றும்
திருவிழாவும் உண்டு.
=
திரைக் காதலை,
அகன்ற வெண் திரையிலும்
சின்னத் திரையிலும்
கண்டு, ரசித்து
பாலுணர்வுத் தெளிக்கும்
மின்னால் தாக்கி
பள்ளிப் பிள்ளைகள் பலரும்,
கூடா நடபால் பலரும்,
ஒருதலைக் காதலுக்குப் பலியாகி
வன்முறைக்கு ஆட்ப்படுவோரும்
சீரழிந்து போவதாய் வரும்
செய்திகளை அடிக்கடி
கேட்டும் படித்தும்
அறிந்த பின்னும்
=
காதலர் தினம் தேவையா,
பண்பாடு நாகரிகத்தில்
உயர்ந்து நின்று
மேனாட்டவர் பலரும் நம்மைப்
போற்றிப் பின்பற்றும் வண்ணம்
தலை நிமிர்ந்து நிற்கும்
எண்ணிலடங்கா மனிதர்கள் பலர்
இன்றும் வாழும் நம்
தாய்த் திருநாட்டில்?

எழுதியவர் : மலர் (14-Feb-16, 10:30 am)
பார்வை : 2188

மேலே