கன்னித்திருட்டு

மகரந்தம் கொட்டுது
மலர்மொட்டவிழுது
மதுகரம் வந்து தட்டுது
மலரும் மது சொட்டுது
தினரம்பம் தினம் வந்து
தீன் பண்டமான மலரை
தீண்டுது சீண்டுது
ஆண்டின் இரண்டாம்
திங்கள் பதிநாலு
மதுகரம் தன் மகரந்தம்
மலர்தனில் ஊண்டுது
மதுர மலர் மனக்கவலையில்
மாண்டது.
மதுகரமும் மெல்ல அகன்றது.

மதுகரம்-வண்டு
தினரம்பம்-அதிகாலை

#10000 #நங்ஙையர் கன்னியை காவுகொள்ளும் #காதலர் தின வாழ்த்து.

எழுதியவர் : மன்னாரமுது அஹ்னப் (14-Feb-16, 6:16 pm)
பார்வை : 92

மேலே