குசுப்பு
குசுப்பு
========
அய்யோ, என்னோட அழகான பேத்திக்கு குசுப்புன்னு பேரு வச்சுட்டானே எம் மவன்?
==
பாட்டி, உங்க பேத்தி பேரு குசுப்பு இல்ல பாட்டி. குஷ்பூ.
===
குசுப்பு –ன்னு தாண்டா வாயிலெ சொல்ல வருது. எம் மவன காலேசுக்கு அனுப்பி பெரிய படிப்பாப் படிக்க வச்சோம். பட்டணத்லெ படிக்கற காலத்திலெ கெட்ட பசங்களோடு சேந்துகிட்டு சினிமாவெல்லாம் பாத்துக் கெட்டுப் போய்ட்டாண்டா. இப்ப 34 வயசு ஆகுது இன்னும் ஒரு படம் தவறாம பாக்கறாண்டா. அவனுக்கேத்த படிச்ச பொண்டாட்டி. சரி, குசுப்பு –ன்னா என்ன அர்த்தண்டா கண்ணு.
===
பாட்டி, குஷ்பூ –ங்கறது இந்தி வார்த்தை. அதுக்கு தமிழ்லெ நறுமணம் –ன்னு அர்த்தம்.
====
ஏண்டா, நறுமணம்-ங்கற பேரு நல்லாத் தானே இருக்குது. அந்த குசுப்புக்குப் பதிலா எம் பேத்திக்கு நறுமணம் –ங்கற அழகான பேரையே வச்சிருக்கலாமே. ஏண்டா, தம்பி நம்ம தாய் மொழிலே அழகான பேருங்களுக்கா பஞ்சம்? எம் மவன் படிச்சும் புத்தி கெட்டவனா இருக்கறானே.
============================
Kushboo = Fragrance = खुशबू = நறுமணம்