புரிந்து கொள்

இயம்பும் காதல்
உதடு விட்டுத் தாவ
மறுத்து ..எனக்குள்ளே
ஒழிந்து கொண்டு இன்னும்

கலையாத நாணம்
பூசி..கவரியாய்
புள்ளி அள்ளி
விசிறி அசைகையில்
கசக்கி உதறிக் காய்கிறேன்
உன்னாலான அனலில்

காய்ந்தபடி மறந்து
கம்பம் தாண்டி பறக்கையில்
எதிர்பாரா மழையடித்து
நனைத்த குளிராய் நடுக்குகிறாய்


தட்ப்பம் போர்த்தி
காய்ச்சலடிக்கையில்
வெட்ப்பம் தா கொஞ்சம்
வெட்க்கம் நிறைத்து
கோடை எரிக்கையில்
நீராய் வா வறண்டு போன
நா நனைத்து .. தாகம் தனிக்க

வெளிப்படையாய் பேசும்
பேச்சில் ஆண்மையின்
பலம் கண்டு கொண்டாய்
அதுவல்ல
உன் அருகாகையில்
உயிர் சுறுண்டு
ஊமையாய் நான்... . நிலமை
வெளியிடாது மறைக்கும் பல
முயற்சிகளில் மும்முரமாகிறேன்

எதற்கும் அஞ்சாதவன்
உன் எதிர் வரையில்
எதுவென்று புறியா
ஏக்கம் என்னுள் ..பல
நாட்களாய் யாரும் அறியா
பரிதவிப்பில் தனியே
தவிக்கிறேன்


கூட்ட நெரிசலிலும் குரல்
காணும் சோதிடனாய்
இருளின் மறைத்தலிலும்
மணத்தால் உனை அறியும்
வண்டாய் நான்
உன் அல்லி கண்டு மயங்கையில்
அடி நின்று மேலாய்
எதுவென்று அறியா ஒன்று
உழல்கிறது


புரிந்து கொண்டும்
புரியாதபடி நீ...
புரிய வைக்க புதிது
புதிதாய் பல
புரிந்தபடி நான்

எழுதியவர் : சஹானா ஜிப்ரி (15-Feb-16, 3:34 pm)
Tanglish : purindhu kol
பார்வை : 310

மேலே