காப்பியத் தலைவி நீ தானே

வெள்ளைத் தங்கம் நின் மேனி
மதியின் பிம்பப் பெண்தான் நீ
தமிழ்போல் அழகு விழியை நீயும்
இமைகீழும் மறைத்து வைப்ப தேனோ
சிரிப்பில் சிவக்கும் இப்பூமிப் பந்து
தென்றலும் மருகும் காதல் வந்து
நகம் சுவைத்து வீதியில் நீநடக்க
தெரு விளக்கும் அணைவ தேனோ
இன்னிசை மீட்டி கூந்தல் அசையும்
இமையின் நடுவே அழகு கசியும்
கைபட்ட இடமெல்லாம் விழிவியக்கும் சித்திரங்கள்
கவின் இமையசைவு காக்கவேண்டிய பத்திரங்கள்
வெண்ணிலவு நிறம்மாறி செவியோடு உறவாட
பூக்காடு பிறந்தெழுந்து வீதியிலே நடமாட
காவிய மொன்று நான் படைத்தால்
காப்பியத் தலைவி நீ தானே..!

எழுதியவர் : செல்வா .மு (தமிழ் குமரன் ) (15-Feb-16, 5:35 pm)
பார்வை : 247

மேலே