கலவை அல்லாத உணர்ச்சி
• • • • • • • • • • • • • • • • • • • • • • •
அந்தக் கனவில்
வந்து வந்து போகிறது ...
என் உயிர் நாணில்
உன் கன்னங்கள்
உருக்கிய
பொன்னின் ஒளி பொருந்தி
மின்னும் !
மது சுரந்து வடியும்
செவ்விதழ் பூத்த உதடுகள்
பூக்களின் வெறியை
மயக்கும் !
அதை தீண்டாமலேயே தாக்கும்
மின்னின் எழில் விழிகளைத்
தூக்கி எறியும் !
கவனம் கலைத்த புன்னகை
இயங்குவதில்லை என
தர்க்கிக்கும் !
இது வெறும் உணர்ச்சிகளின்
கலவையல்ல ....
தூய்மை பெறும் பாசம்
காதல் அன்பு இங்கு தான்
உச்ச ஸ்தாயியில் தந்தி மீட்டும்
இராகம் !
இந்த பூவின் கூர்மைக்கு
ஒப்புவமை ஏதுமில்லை ....
இரவுகளின் மௌனங்களை
இந்த சிரிப்பலை சில்மிஷங்கள்
நீடிக்க விடாது தடுக்க முடியாது !
மனதில் வைத்து விட்ட
இந்த மாதுளை முத்துக்கள்
மட்டுமே
மரணத்தைத் தாண்டிய நிலையிலும்
சிறகடிக்கத் துணை இருக்கும் !
- பிரியத்தமிழ் -