இளைய பாரதம்
இளைஞர்கள் நாங்கள் !!!
எங்கள் வானில்
கதிரும் நிலவும்
ஒரே நேரத்தில் ...
நட்பும் காதலும் போல ...
எங்கள் உலகில்
கிழக்கும் மேற்கும்
ஒரே திசையில்...
பாடமும் படமும் போல...
எங்கள் வாழ்வில்
வெயிலும் மழையும்
ஒரே பொழுதில் ...
வீடும் வகுப்பும் போல ...
கணணிக் கூட்டுக்குள்
இணையத் துடிப்பு- அதுவே
எங்கள் நெஞ்சகூட்டுகுள்
இதயத் துடிப்பு.
எங்கள் முகம் பார்த்தால்தான்
முகநூலும்
முகம் மலர்கிறது.
நாங்கள் சுண்டிவிட்டால்
நாணயத்தில்
பூவும் தலையும்
ஒரே நேரத்தில்..
.
எங்கள் பாதம் பட்டால்
முள்ளில் கூட
தேன் வடியும்.
நேற்றை மறந்து
இன்றைக் கடந்து
நாளை தேடி
நடந்திடுவோம்!