என் தவறுதான் உன்னை காத்திருக்க வைத்தது

கடற்கரை காற்றும்
உன்
தேகம் தொட்டதால் குளிர் காய்ச்சலில்
விழுந்ததடி...

குளிர் மணலும்
உன்
விழிகளில் விழுந்ததால் கல்லாய்
போனதடி...

நிலவின் ஒளியும்
உன்
மேனி வெளிச்சத்தால் கண்பார்வை
இழந்ததடி...

பறவை குஞ்சுகளும்
உன்
முச்சுக்காற்று பட்டதால் வானில்
பறக்குதடி...

கடல் அலைகளும்
உன்
பார்வையால் பொங்கி
எழுந்ததடி...

சிப்பிக்குள் முத்தும்
உன்
சிரிப்பால் சிதறி
ஒடியதடி...

இத்தனையும் என்னால் தான்
உன்னை காத்திருக்க வைத்தது
என் தவறு தான்

எழுதியவர் : சிவா (17-Feb-16, 10:09 pm)
பார்வை : 225

மேலே