சிட்டுப் போல சிரிப்பதேனோ

பட்டுச் சேலைக் கட்டிக் கொண்டு
எட்டி நடையைப் போடும் பெண்ணே
வெட்கம் வந்து சொக்க வைக்கச்
சிட்டுப் போல சிரிப்ப தேனோ ?

கொண்டைப் பூவின் வாசம் மணக்க
கெண்டை விழியின் பார்வை மயக்க
சுண்டி னாற்போல் கன்னஞ் சிவக்க
கண்ணே நீயும் போவ தெங்கே ?

சின்ன யிடையில் குடத்தை ஏந்தி
அன்ன நடையால் மனத்தை அள்ள
மின்னல் கீற்றாய் பல்லு மொளிர
பொன்னே பூத்தக் கோல மென்ன ?

நெஞ்சி லன்பைத் தேக்கி வைத்து
வஞ்சி யுன்றன் நினைவில் தவித்து
கெஞ்சி நிற்கும் மாமன் காண
அஞ்சி டாமல் விரைந்து செல்க !

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (17-Feb-16, 11:34 pm)
பார்வை : 160

மேலே