மயான பூமி

நெஞ்சு பொறுக்குதில்லையே
பிஞ்சு குழந்தைகளை
பிணமாகப் பார்க்கும்போது.....!

காட்டில் வாழும் விலங்கினம்கூட
எம்மக்களைக் கட்டியணைத்துக் கொஞ்சும்போது......

தாய்ப்பால் அருந்தாத ஈனப்பிறவிகளோ
தாகம் தனிக்குதடா.....!

ஒரு தவறும் அறியா எம்மக்களின்
உதிரத்தைக் குடித்து......!

மழலையின் சிரிப்பில்
இறைவனைக் காணலாம் என்ற
மாமேதைகளே.........

இறைவனின் நிலைமையை
சற்று நிமிர்ந்து நின்று பாருங்கள்.....

அவன் அன்பை அறியா
அறக்கக்கூட்டத்திடம் குண்டடிபட்டு
குவித்து கிடப்பதை.....!!

பிஞ்சு உள்ளங்களை பசிக்கு பகடையாடும்
பிணந்தின்னிக் கழுகுகளே.........!

குறித்து வைத்துக்கொள்ளுங்கள் உம் கையேட்டில்...........

நீங்கள் மண்ணுக்கு இறையாக இன்னும்
வெகுநாட்கள் இல்லையென்று.....!!

-தமிழ் தாயின் புதல்வன்.....
சதீஷ் ராம்கி.

எழுதியவர் : சதீஷ் ராம்கி (18-Feb-16, 4:57 pm)
சேர்த்தது : சதீஷ் ராம்கி
Tanglish : mayaana poomi
பார்வை : 163

மேலே