நீல நிலவு Blue Moon

எத்தனையோ பெண்கள்
நான் செல்லும் வழியில்...
அவர்கள் உன்
அழகுக்கு ஈடாகுமோ!
ஆயிரம் பெண்கள் இருந்தாலும், என்
அபூர்வப் பெண் நீதானே!
நிலவும் ஒரு பெண்தானே
நீ எனக்கு ஒரு அபூர்வ நிலவு!
வானத்தில் மாதம் ஒருமுறை
வரும் முழு நிலவு!
வருடத்தில் ஒருமுறை
வரும் அபூர்வ நீல நிலவு!
நீ எனக்குக் கிடைத்த முழு நிலவு
அபூர்வ நீல நிலவு!