என்னவள் எனக்காக கிறுக்கிய சில வரிகள் என்னவள் டைரியில் இருந்து எடுத்தது

என்னவனே!!!
உனக்காகதான் நான்

விசித்திரமானவள் தான் நான்
உன் விசித்திரமான காதலினால்

நானும் உனக்கு சிறிதும் சளைத்தவள்
இல்லை
உன் எழுத்துக்களுக்கு உயிர் கொடுத்தவள் நான்

என்னை பற்றி கவி எழுது என்றேன்
என்னையே கவியாக வரைந்தாய்

இன்றும் நினைவில்
அந்த வெகுளி
பார்வை காதல்

திடீரென ஒரு பிரலயம்
என் கண் முன்
உன் காதலால்

உன் விழிகள்
என் வாழ்வை பிரதிபலிக்கிறது.

காதல் எனும் கவியை
நீ சொல்லும் போது
விழிகளின் ஈரத்தோடு
உன் பெயரை சொல்லி திட்டி தீர்த்தேன்
இதை சொல்ல உனக்கு இத்தனை நாட்களா?

உண்மைதான் இரண்டு வருடம்
காத்திருக்க வைத்து விட்டேன்.
என்னை நீ புரிந்து கொள்ள இல்லை
உன்னை நான் புரிந்து கொள்ள
இன்றும் நீ எனக்கு புரியாத
புதிராகதான் இருக்கிறாய்.

உன் நிறங்கள் இல்லா கற்பனை வானவில்லை...
என் கனவு கற்களை எரிந்து
ஒரு போதும் நான் களைக்க மாட்டேன்.

கள்வன் தான் நீ அதனால்தான்
என் மனச்சிறையில்
உன்னை அடைத்து வைத்துள்ளேன்.

என் மனச்சிறையில் அடைப்பட்டது
நீ மட்டும் தான்
உன் கற்பனை இல்லை

தனிமையின் சந்திப்பு காதல் என்றால்
நாம் செய்வது காதலா?

தொடுவதின் சுகம் காதல் என்றால்
நாம் செய்வது காதலா?

களவி ஆசை காதல் என்றால்
நாம் செய்வது காதலா?

நிறப்பிரிப்பு காதல் என்றால்
நாம் செய்வது காதலா?

கோட்டை அடிக்கல் காதல் என்றால்
நாம் செய்வது காதலா?

உன் கனவு புதுமனையிலும் கூட
நானே புதுபெண்ணாக...
என் தலைவா!!!

விரைந்து வா!!!
என் தலைவா!!!

(பின் குறிப்பு:என் காதலி எனக்காக
எழுதிய வரிகள்
அவள்
இலக்கியவாதி இல்லை கவியாலேயே
என்னை கொல்வதற்க்கு
சராசரி ஆங்கில பட்டதாரி.பெயர் சொல்ல விரும்பவில்லை)

எழுதியவர் : சிவாவின் காதலி (18-Feb-16, 10:09 pm)
பார்வை : 790

மேலே