எனக்கு கிடைத்த மரியாதை
உண்மை உழைப்பில்
மிஞ்சியது
வியர்வை மட்டுமே.
பார்வையில் படும்
நாடகவேலைக்கு
பாராட்டுபத்திரம்.
வீடுகட்ட
செங்கல் தூக்கியவன்
கை சிவப்பு,
கலர்பூச
மறைந்து போகிறது.
மரம் வெட்டி
சாய்த்தவன் கை
காய்த்து போனது.
கட்டில்லில்லே
படுத்தவன்
அறியாமல்
உறங்கி போனது.
பணம் இருந்ததால்
பட்டத்தையும்.
நடிக்கும் திறன் இருந்ததால்
பாராட்டையும்
பறிக்கலாம்.
கேட்டு வாங்க மனமில்லை
இதுவும் கடந்து போகட்டும்.
நாளை நடப்பதை பார்போம்.