வறுமை வாட்டுதடா
பாரடா தோழா.....
பாரில் நடக்கும் அதிசயத்தை....!
பட்டினிக் கூட்டமொன்று
குப்பைகளைக் கோவிலாக மதிப்பதைப்பார்...!
நாட்டை வல்லரசாக்க
நாள்முழுக்க திட்டம் தீட்டும் நீதிமான்களே......!
முதலில் இவர்கள் வறுமையை ஒழித்து
வயிற்றுப் பசியை போக்குங்கள்..........
வல்லரசாகும் உம்நாடு
வற்றாத வளச்சியோடு....!
வீட்டையும் நாட்டையும்
வெடிவைத்து சூரையாடும்
விந்தை மனிதர்களே.......
வறுமையை வேட்டையாட நல்ல
வெடிமருந்தை உருவாக்குங்கள்-உங்கள்
உலகளாவிய அறிவைக்கொண்டு....!!
பட்டினிச் சிறையில் சிக்கி
பரிதவிக்கும் இவர்களை....
நீங்கள் பஞ்சு மெத்தையில் அமர்த்தி
பால் பழம் தர வேண்டாம்....... !
பாழாக்கும் சோற்றை
இவர்களின் பட்டினிக் கணக்கில் போட்டுவிடுங்கள்...........
இறுதிவரை நிலைத்திருக்கும் உம்பெயர்
இவர்கள் இறந்தபின்னர் சாம்பலிலும்......!!
-சதீஷ் ராம்கி.