ஓரளவே போதும்
..............................................................................................................................................................
மேகம் துரத்தியது....
நிலா ஓடியது...
“ காப்பாத்துங்க... காப்பாத்துங்க...”
நட்சத்திரங்கள் வேடிக்கை பார்த்தன..
“ தனியா யார் வரச் சொன்னது?
நாம என்ன பண்றது? ”
பெண் நிருபரிடம் முணுமுணுத்தன சபையேறிய கிரகங்கள்..! (கிரகணங்கள்..! ! )
ஓடிய நிலா நின்றது..
ஓடினால் இழப்பது உறுதி..
ஓங்கினால்?
வாய்ப்புண்டு..!
விசையுடன் திரும்ப ஓடி
மேகத்தின் மீதே மோதியது..!
மீண்டும் மீண்டும் மோதியது...!
“ அப்படித்தான்..! அடி.. ! தாக்கு..!
இரும்மா.. நாங்களும் வரோம்..! ”
நட்சத்திரங்கள் சேர்ந்து கொண்டதில் மேகத்துக்கு ரத்தக்களறி..!
இதுதானம்மா உலகம்..!
இளைத்தவர்க்கு அல்ல..!
திறனறிந்து
எதிர்ப்பவர்க்குத்தான் உதவும்..
அதுவும்
ஓரளவுக்கு –
ஒவ்வொரு கையும்...!