உழைப்பு

உழைப்பு
***********
எனக்குன்னு...
அம்மா என்ற உறவு...
இருக்கோ இல்லையோ...!!

இருந்திருந்தா...?
இப்படி...
பண்ணியிருப்பாளோ இல்லையோ...!!

காச சிறுக சிறுக...!
சேத்துவைக்கிறாள்...!!

என்னை தன் மடியில...!
வச்சிக்கிறாள்...!!

மொட்ட வெயிலிலும்...!
உழைக்கிறாள்...!!

என்னை தன் பிள்ளைன்னு...!
எல்லோர்கிட்டையும் சொல்லுறாள்...!!

இப்ப என் கண்ணுல...
தண்ணி வருது...!
பேச்சு இல்ல...!!
பசி மயக்கம்...!!!

அய்யா...!
குழந்தைக்கு பால் வாங்கணும்...!
அண்ணே...!
அக்கா...!
அம்மா...!

என்ற வார்த்தை மட்டும்..
என் காதில் விழுகிறது...!!!

அவ உழைக்க ஆரம்பிச்சிட்டா...!

கிடைக்கிற காச...
சிறுக சிறுக சேத்துவைப்பா...

தனக்கு போதும்னு தோனுச்சினா...!
அதுல எனக்கு பால் வாங்குவா...!!!

இது இப்படியே நீடிச்சதுனா...?
எனக்கு...
பால் ஊத்துனாலும் ஊத்திடுவா...!!

இவ...
என்ன பெத்த தாயாயிருந்தா...?
என்ன வச்சி பிச்சை எடுக்கமாட்டா...!

இவ...
என் வளர்ப்புத் தாயாயிருந்தா...?
கிடைக்கிற முதல் பத்துரூபாய்யில...
என் பசிய போக்கிருப்பா...!!!

ஆனா....
இவ...
நான் வளர்க்குற தாயாச்சே...!

நான் செத்தாலும்...
அவ பசிய போக்கணும்...

உண்மையில நான் தான்...
குழந்தை தொழிலாளி...

இப்படிக்கு...
பிச்சக்காரி கையில சிக்குன...
பச்சைக்குழந்தை...

இவண்
✒ க.முரளி (spark MRL K)

எழுதியவர் : க.முரளி (21-Feb-16, 3:30 pm)
Tanglish : ulaippu
பார்வை : 1560

மேலே