அன்னையின் மடியில்

வாருங்கள் வாழ்த்துவோம்.....!

உயிர்தந்து உருதந்து....
நம்மை உலகிற்கு அடையாளம் காட்டியவளை....!

அன்பை அடகுவைத்து
எட்டடுக்கு மாடிகட்டி....
ஏறிநின்று நோட்டம் விடும் எனதருமை
ஏமாளிக் கூட்டமே.............

தன் எட்டுமுழப் புடவையிலே
அவள் அன்பெனும் வீட்டிலமர்ந்து
என்போல் தாலாட்டு கேட்டதுண்டா?

உன் வாழ்நாளில் ஒருநாளேனும்......!!

-சதீஷ் ராம்கி.

எழுதியவர் : சதீஷ் ராம்கி (19-Feb-16, 1:16 pm)
சேர்த்தது : சதீஷ் ராம்கி
பார்வை : 592

மேலே