அன்புக்கொடி

அன்புக்கொடி
============
==================
============
அன்புக்கொடி எங்கண்ணே?
==
யாரைடா தம்பி கேக்குறே?
==
நீங்க பெத்த அன்புக்கொடி-யைத் தாண்ணே கேக்குறேன்? எங்கே அவ?
====
ஏண்டா நீ என்னோட உடன்பிறப்பா இருந்தும் உன்னோட அண்ணன் பொண்ணோட பேரு தெரியாதா?
=====
தெரியும் அண்ணே. அவ பேரு பிரேமலதா. அதுகூடவா எனக்குத் தெரியாது. சரி அந்தப் பேருக்கு என்ன அர்த்தம்னு சொல்லுங்கண்ணே.
====
டேய் தம்பி, நான் எம்பொண்ணுக்கு அழகான தமிழ்ப் பேரா வைக்கலாம்னு ஆசைப்பட்டேன். உன்னோட அண்ணியைப்பத்தி உனக்கு நல்லாத் தெரியுமே. அவ ஒரு திரைச் சுவைப் பைத்தியம். திரைப்பட மோகத்திலே பொண்ணுக்கு வீம்பா பிரேமலதா-ங்கற இந்திப் பேர வச்சுட்டா. இதுக்காக இல்லத்தரசிகிட்ட மோதவா முடியும். அந்தப் பேருக்கு என்ன அர்த்தம்னு அவளுக்குந் தெரியாது எனக்கும் தெரியாது. உனக்குத் தெரிஞ்சா சொல்லுடா தம்பி தங்கப்பா.
===
அண்ணே இந்திலே ‘பிரேமா’ -ன்னா ’அன்பு’ -ன்னு அர்த்தம். ’லதா’- ன்னா ’கொடி’- ன்னு அர்த்தம்.
===
இரு, இரு அண்ணிகிட்டச் சொல்லி பொண்ணுப் பேர அன்புக்கொடி-ன்னு மாத்திடறேன். நம்ம செம்மொழி தமிழ் தொன்மையானது சீரிளமை குன்றாதது. ஒரு கலப்பட மொழிப் பேருங்கள நம்ம பிள்ளைங்களுக்கு வச்சு நம்ம செம்மொழியைக் கேவலப்படுத்தக் கூடாதடா தம்பி.
===
இப்பவாவது உங்களுக்குப் புரிஞ்சுதே அது போதும் அண்ணே எனக்கு.
=========================================================================
=========================================================================
தமிழ்ப் பெயர்களைப் பிள்ளைகளுக்குச் சூட்டுவதே தமிழருக்கு அடையாளம். வாழ்க தமிழ்!
==========================================================================================
சிரிக்க அல்ல, சிந்திக்க, மொழிப் பற்றை வளர்க்க.

எழுதியவர் : மலர் (21-Feb-16, 5:04 pm)
பார்வை : 162

மேலே