அன்பே

அன்பே.....!
அன்றொரு நாள்
தென்றல் வீசும்
மாலை நேரத்தில்
பூக்கள் கொஞ்சும்
நந்தவனத்தில்
பௌர்ணமி நாளில்
உன் மடி மீது
தலை வைத்து படுத்திருந்தேன்...
அப்பொழுது
வானிலிருந்து நம்மை பார்த்து
அழகாக சிரித்துக் கொண்டிருந்த
நிலவை நான் வருணித்தேன்...
அருகில் இருக்கும்
என்னை வருணிக்காமல்
நிலவை வருணிக்கிறீர்களே...
என்று நீ கோபித்துக் கொண்டாய்...!
அப்பொழுது
சிவந்திருந்த உன்
முகத்தின் அழகு
அப் பௌர்ணமி நிலவின்
அழகிற்கு ஈடாகாதடி
என் கண்ணே.....!

எழுதியவர் : நித்யஸ்ரீ (22-Feb-16, 12:11 am)
Tanglish : annpae
பார்வை : 309

மேலே