பாராட்டு

கணவன் மிக சோம்பேறி.எந்தவேலையும் செய்வதில்லை.
ஒரு நாள் மனைவி அவனை நன்கு திட்டி கடைக்கு போய் காய்கறி வாங்கி வர சொன்னாள்.பையை எடுத்து கொண்டு கிளம்பினான்.கடையில் முதலில் அவன் பார்த்தது வெண்டைக்காய்.
ஒரு கிலோ வாங்கிகொண்டு மனைவியின் பாராட்டை எதிர்நோக்கி மகிழ்வோடு சென்றான்.
வெண்டைக்காயை பார்த்த மனைவிக்கு பிரசர் எகிறியது.என்யா வெண்டைக்காயை பாத்துவாங்க துப்பில்லை.எல்லாம் முத்தலாக இருக்கிறது என கடிந்து கொண்டாள்.
மறுநாள் மனைவி சொல்லாமலே கடைக்கு புறப்பட்டான். கடையில் நல்ல பிஞ்சு வெண்டைக்காயை பார்த்து வாங்கினான்.
மனைவிடம் பாராட்டு பெறும் கனவோடு சென்றவனுக்கு மீண்டும் டோஸ் விழுந்தது.ஏன்யா இப்படி பிஞ்சை வாங்கிகொண்டு வந்திருக்கயே இதை வச்சால் எல்லாம் கொழ கொழன்னு போய்விடுமே என திட்டினாள்.
கணவன் இரவு முழுவதும் தூங்கவில்லை.மறுநாள் எப்படியாவது மனைவியின் பாராட்டை பெற்றுவிட வேண்டும் என வெறியோடு கடைக்கு சென்றான்.
பிஞ்சும் இல்லாமல் முத்தலும் இல்லாமல் நல்ல வெண்டைக்காயை பார்த்து வாங்கினான்.மனைவியிடம் கொண்டு பாராட்டை பெறும் கனவோடு கொடுத்தான்.
வெண்டைக்காயை பார்த்த
மனைவி அதை பார்த்தவுடன் சொன்னாள் “ஏனய்யா உனக்கு வெண்டைக்காய் தவிர வேறு காய்கறியே தெரியாதா” என்று.!!

எழுதியவர் : பகிர்வு - செல்வமணி (22-Feb-16, 11:42 pm)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : paarattu
பார்வை : 725

சிறந்த நகைச்சுவைகள்

மேலே