சரிதானா

ஒரு குல்பியின் விலையில்
பிறந்தநாளின்போது ஆகும் மிட்டாய்க்கான காசில்
திரையரங்கில் வாங்கும் பாப்கார்னுக்கு செய்யும் செலவில்
ஒரு ஏழையின் வயிறு நிறைவதற்கான வாய்ப்பு
எத்தனை சதவிகிதம் உள்ளதென
கணக்குப் போட முயன்றுத்
தோற்றுக் கொண்டிருக்கிறேன்
ஒருவேளை தோற்கடிக்கப்படுகிறேனோ என்ற சந்தேகம் என்னுள்...

எழுதியவர் : பிரத்யுக்ஷா பிரஜோத் (24-Feb-16, 12:31 pm)
Tanglish : sarithana
பார்வை : 77

மேலே