தங்கிய மௌனங்கள்
்
ஓஓ பெண்ணே,
காதலோடு நின்ற பொழுது
தனிமையில் தான் நான் இருந்தேன்!
இன்றோ!
வெறுமையில் இருக்கிறேன்!
பயந்து பயந்து
பதுங்கிய வார்த்தைகள்
வாயினிலே தற்கொலை
கொண்டதடி!!
வெறும் கண்களால் மட்டுமே
நம் காதல் பறிமாறப்பட்டது!
வார்த்தைகள் தவறிவிட்டன!
பள்ளிபருவ முடிவில்
அதோ அந்த வாசலில்
தான் தயக்கத்தோடு நின்றிருந்தேன்!
உன் காதலை நீ சொல்லாமல்
பள்ளிபிரிவுக்கு வருத்தம் தெரிவித்தாய்!
கல்லூரி முடிவிலும்
நீ பிரிவுக்கு வருத்தம்
மட்டுமே தெரிவித்தாய்!
காலங்கள் கடந்து
கல்லூரியில் நின்றது!
ஓஓ!!
மௌனங்கள் வார்த்தைகளாயின!
வார்த்தைகள் கவிதைகளாயின!
கவிதைகள் காவியமாயின!
இன்றோ!
வகுப்பு ஆசிரியராய் நான்!
அதில் மீண்டும் மாணவியாய் நீ!
மேல்படிப்பு உனக்கு
வாய்ப்புகள் தரலாம்!
எனக்கோ சந்தோஷத்தை
தந்தது!
தினம் ஆசிரியராய் உள்ளே
நுழையும்போது,
மாணவியாய் நீ!
மழைதான் என் நெஞ்சுக்குள்!
இப்படியே கழிந்தது
சில ஞாபக தருணங்கள்!
சாலையோரம் என்னை
பார்த்தபடி நீ வந்தாய்!
சொல்லாத காதலை சொல்லிவிடவா?
அணைக்காத அணைப்பினை
அணைக்கவா?
என்ற பதற்றத்தோடு
உன் கண்ணோடு என் கண்கள்!
மௌனங்கள் சில நொடிகள்!
பதற்றத்தோடு எனக்கு
திருமணம் ஆகிவிட்டது என்றாய்!
இதயத்துடிப்பு ஒரு நொடி
நின்று துடித்ததடி!
உணர்ச்சியின் உச்சத்தால்
கண்ணீர் வடியுதடி!
பல வருடக் காதல்
அரை நொடியில் முடிந்ததே!
மௌனமாய் கண்ணீரோடு
கீழே பார்த்தபடி
உன்னை விட்டு
அந்த இடத்தைவிட்டு
வந்துவிட்டேன்!
இனி
தினம் ஆசிரியராய் உள்ளே
நுழையும்போது,
மாணவியாய் நீ!
உன்னே பார்த்துக்கொண்டே
இருப்பது நரகவேதனைதான்
பெண்ணே!
இன்று
காவியம் காதலாயின!
காதல் வார்த்தையாயின!
வார்த்தை மீண்டும்
மௌனமாய் வாழ்ந்தன!!!