காலைப் பொழுதில்

2016.02.24
காலைப் பொழுதில் ஒருகவிதை
~ கன்னல் மொழியிற் பாடிடவும்
சோலைக் குயிலின் ஓசையிலே
~ சுகமாய் நினைவும் விரிகிறதே
ஆலைக் கரும்பின் சாறனைய
~ அன்பு நட்பாம் அத்தனையும்
பாலை நிலத்துப் பசுமையெனப்
~ பாங்காய் மனத்துட் படர்கிறதே!

(அறுசீர் ஆசிரிய விருத்தம்)

ஞா.நிறோஷ் அரவிந்த்
2016.02.24

எழுதியவர் : ஞா.நிறோஷ் (24-Feb-16, 7:32 pm)
பார்வை : 62

மேலே