நினைவில் அவள்

எங்கெங்கோ
உன்னை தேடி அலைந்தேன்
நீ இதயத்தில் இருப்பதை மறந்து
மெல்ல மெல்லதான் உணர்ந்தேன்
என் இதயமே நீதான் என்று...

இரவிடம் களவுபோன
கனவுகளில் உன்னை தேடினேன்
நீ என் பார்வையில்
படிந்திருந்தாய்
பார்த்து பார்த்து தெளிந்தேன்
என் கண்களே நீதான் என்று

நீ எனக்கான உணவல்ல
என் பசி.. எவ்வலு உண்டாலும்
நேரம் தவறாது வந்து விடுவாய்.

என்னைச் சுற்றி சுழலும்
இந்த நீ என்ற உலகத்தில்
என்னை மறந்துவிட்டேன்
உன்னை நினைத்தபடி

எழுதியவர் : வேடன் (24-Feb-16, 9:44 pm)
Tanglish : ninaivil aval
பார்வை : 206

மேலே