முக்கனிகளின் சங்கமம் nee

முதல் சுவையடி நீ ...
யாரும் அறியாமல்
சேட்டைகள் செய்து
ரசிக்கப்படும் போது ..

இரண்டாம் சுவையடி நீ...
உன் புறம் கண்டு
பலர் விலகுவதாலும் ,,
உன் அகம் கண்டு
சிலர் விரும்புவதாலும்...

மூன்றாம் சுவையடி நீ...
பொறுப்புகள் பல தாங்கி,,
சந்ததிகள் தழைத்தோங்க
கனிவாய் கணவனுக்காய்
வாழும் போது ...

கால மாற்றம் தந்த
கலப்படம் அற்ற
முக்கனிகளின் சங்கமமே
நீயடி பெண்ணே !!!

எழுதியவர் : உமா அஸ்வினி (24-Feb-16, 10:02 pm)
சேர்த்தது : உமா அஸ்வினி
பார்வை : 105

மேலே