தொலைந்து போன நட்பும் நானும்

உன்மத்தம் ஆகுதே உன்னை நினைக்கையில்
நெஞ்சோரம் ஈரத் துணியால் ஓர் ஒத்தடம்......

உன் நட்பென்றால் அது நான் மட்டும் நனையும்
ஆகாய
பேர் மழையாகும்...

உன் வருகைகள் என் முற்றத்து
காத்திருப்பானது...
நீ வராத போதும்
அது நீள்கிறது...

இதழ் விரியா பூவின்
வெட்கத்தின் ஓரத்தில்
நம் மௌனம் கூச்சலிடுகிறது...
அது நமக்கிடையில்
யுத்தம் தொடருகிறது...

புதியதாய் வரவான
சொந்தங்கள்
நமக்கிடையில்
புதியதாய் ஒரு பாலம்

முர்ச்சிக்கும் நினைவலையில்
முடியாத ஓர் யாத்திரை
கரையலையாய்
முடியத்தான் கூடாது
நான் நீ...

உறவுக்குள் உருவாகி
உனக்குள் நானாகி
எனக்குள் நீயாகி
நமக்குள் நட்பாகி
பிரிவு மட்டும் நிலையாகி
நீ நான் திசை திக்காடி போகிறது...

நம்மை சேர்த்து பார்த பௌர்ணமி
நிலவும் நம் வீட்டுச்சுவர்களும்
நிழல் தர அமர்ந்து கதை பேசிய
முந்திரி மரங்களும்,
காத்துக் கிடக்குது நம்மை சேர்த்துப் பார்க்க..

பாவம் அவை
நாம் மீண்டு வரப்போவதில்லை
எனத் தெரியாமல்
ஏங்கிக் கிடக்கிறது
உன்னோடு நான் தொலைத்த
என் இறுதிப் புன்னகை போலவே



M.F.Askiya

எழுதியவர் : M.F.Askiya (29-Feb-16, 5:09 pm)
பார்வை : 811

மேலே