சமையல் - குறும்பா

நான் செய்ய நினைத்தேன் தளிகை
வாங்கி வந்தேன் சில மளிகை
சமையல்காரன் வேசம்
சமையல்கூடம் நாசம்
மனைவியின் கையில் உலக்கை

****

காலாற நடந்தேன் சில தூரம்
வயிறு புடைக்க சாப்பிட்டேன் ஸ்வீட் காரம்
நாளும் நடந்தும் பயனில்லை மாறாக
வேகமாக ஓடணும் இப்போ
வயிற்றுக்குள்ளே நல்ல சேதாரம்

****

அம்மாவுக்கு ஒரு ஆசை
அன்புமகள் கையால் ஒரு தோசை
சுட்டது வட்டமில்லை
ஒன்றொன்று ஒட்டவுமில்லை
தோசையில்லை கிடைத்தது அழுகையோசை

- செல்வா

பி.கு: லிமெரிக் நகைச்சுவை கலந்து படைப்பு

எழுதியவர் : செல்வா (29-Feb-16, 8:10 pm)
பார்வை : 88

மேலே