ஒரு தம்பியின் வலி

I MISS U KAYATHRI AKKA

காயத்திரி அக்கா இது உங்களுக்காக

உனை பிரிந்து இன்றுடன் ஆகிறது
எட்டு ஆண்டுகள்

யார் நான் யாரோ!!! நான்
உன் உடன் பிறவா தம்பியாக நான்

என்றும் நினைவில் நீ தான் அக்கா
என் பெயர் மறந்து விடும் தம்பி என்று
நீ அழைக்க!!!



பெரியவரே நின்று கொண்டிருக்க
சிறுபிள்ளைக்கு ஏது இடம்
உன் மடியில் நான் அமர

கணினியை காண்பதே!!!
கனவாக
என் வாழ்வில்
பழக கற்று கொடுத்தாயே!!!

இன்றும் நிற்கிறேன் பாடலின்
அன்று நீ அடிகடி இசைக்கும் பாடல்
நீயே!!! அதற்க்கு பின்னனி குரல் என்று

எட்டு வருட பிரிவு ஒன்று
பெரிதாய் பட வில்லை
உன் நினைவுகள் என்னை சுமக்க

எத்தனை பெண்களை
இருந்தாலும்
உன் இடத்தை நிரப்ப
எவராலும்
இயலாத ஒன்று...

ஒருமாத பழக்கம் தோற்றாள்
என் அன்னை உன்னிடம்....

என் கவியிலும் பெண்மை உண்டு
அதை யார் அறிவா!!! உன்னால் என்று




திருமண செய்தி அறிந்தேன் அக்கா
உன் மனதிற்க்கு எல்லாம் நன்மை என
அறிந்தேன் அக்கா

உலகம் மிக சிறியது அக்கா
தொலைந்த இதயங்களையே சிலர்
கண்டு பிடித்து விடுகிறார்கள்.
உன் பாசத்தை கண்டு பிடிப்பதில்
கடினம் ஏதும் இல்லை எனக்கு...

அடுத்த பிறவி
ஒன்று உண்டு எனக்கு
கடவுள் சொன்னால்
உன் தம்பியாக
பிறக்க வேண்டும் அக்கா
மீண்டும் தம்பி என
நீ அழைக்க...

இப்படிக்கு உங்கள் தம்பி சிவாகுட்டி

-சிவா

எழுதியவர் : சிவா (29-Feb-16, 10:49 pm)
பார்வை : 860

மேலே