என்னவருக்காக

பழகியது
என்றாலும்
என்றும்
புதியது
தேர்வு தாள்...
செய்தி தாள்...
உன் வருகை...
புதியது
என்றாலும்
பழகியது
உணவும்...
பிரயாணமும்...
உன் செயல்களும்...
பாதையில்லா
பிரயாணம்
வேண்டும்
உன்னோடு..
பாதையை
நாமே
போட்டுக் கொள்வோம்...
வேரில்லா மரமாய்
நின்றேன்...
விழுதாய்
என்னுள்
விழுந்து
பிரளயமாய்
ரூபம் கொண்டாய்
என்னில்...
கண்ணீருக்கு தடுப்பணை ஆனாய்...
அன்பை
பொங்க வைத்தாய்...
உயிரை மிதக்க வைத்தாய்..
உடலை பறக்க வைத்தாய்...
உயிரை
நுரைக்க வைத்தாய்..
உன்னை என்னில்
உறைய வைத்தாய்..
கடைசியில் எனை கரைய வைத்தாய் உன்னில்.....
நான் உன் மழலை
சிறு கணமும்
கையை விட்டு விடாதே..
~ ஏழேழு ஜென்மம் என்னோடு பிரயாணம்
செய்யவிருக்கும் என்னவருக்காக (எனக்கு உங்கள் முகம், பெயர் எதுவும் தெரியாது ஆனால் நான் எழுதிய எழுதும் யாவும் உங்களுக்கானவை...
என் உயிருக்கானவை...
(எனை பெற்றவர்களின் சொல் எனக்கு வேதம் ஆனால் தங்கள் சொல் எனக்கு என் உயிர் சுவாசம் ஆகும்))
உன்னவள் பிரபாவதி வீரமுத்து