நீ விரும்பும் வரம்
நடக்கும் போது நடை தொடரும்
ஓடும்போது வேகம் கூடும்
உடையவனின் உலகத்தில்
இல்லாதவனுக்கு இல்லை இடம்
கூட்டு பேரம் குவிக்கலாம் லாபம்
பிரித்து மேய்ந்தால் எதற்கு கோபம்
களைப்பும் போதையும் கொஞ்ச நேரம்
களிப்பும் கஷ்டமும் இல்லை நிரந்தரம்
புற்றுக்குள் நுழையட்டும் கொடிய விஷ நாகம்
பூட்டியே இருக்கட்டும் கடையின் முன்புறம்
என்றும் நீ உருவாவது உன் நிமித்தம்
எங்கிருந்து வந்தது இதில் குருட்டு அதிர்ஷ்டம்
இடையிலே வந்தவனும் நடுவிலே போனவனும்
உன் கூடவே வருவது முடியாத காரியம்.
வீடுதான் கடைசியாய் நீ வந்து சேரும் இடம்..
முன்னாலே பார்..பின்னாலே எதற்கு நீ போகணும் ..
தன்னாலே வரும் பார்.. நீ விரும்பும் வரம் !
சாரே ஜகான்சே அச்சா..!