தினம் ஒரு காதல் தாலாட்டு - பாடல்-22

ஒன்றைக்கண்ணு டோரீயா
சப்கோர்ட்டுக்கு வாரீயா
நீ வம்பிழுத்த பெண்களுக்கு
நஷ்ட்ட ஈடு தாறீயா....!

தண்டுராப் போட்டு உன்னை
தண்டணைக்கு உள்ளாக்குவோம்
நண்டுப்போல ஒலிஞ்சாலும்
சிண்டுபிடிச்சித் தூக்குவோம்

ஒத்தைக்கண்ண வச்சிக்கிட்டு
எட்டுப்பொண்ணப் பாக்குற
துட்டுக் கொஞ்சம் கொடுத்துப்புட்டு
அவ கற்ப விலைப் பேசற..!


எங்களிடம் வச்சிக்கிட்டா
குட்டு வாங்கியே சாகுவ
எட்டுவுட்டா வாங்கிக்கிட்டு
குட்டிக்கர்ணம் போடுவ

பட்டுவேட்டி கட்டிப்புட்டா
நீ பெரிய மனுசனா – அதை
பாக்கியில்லாம கிழிச்சிப்புட்டா
நீயும் பரதேசிதான்...!

கம்பீரமா சிரிச்சா நீ வீரப்பனா - மூஞ்சில
கரிப்பூசி மொழுகிடுவோம் ஓவராப்போனா
பாத்து நடந்துக்கடா பொட்டப்பைய்யா – இல்லனா
பட்டை உறிஞ்சிப்போகும் தனித்தனியா..!

முடியப்பாரு முள்ளம்பன்றிப் போல - உன்
மூளையில இருப்பதென்ன களிமண்ணு கூழா..?
ஆளப்பாத்தாலே ஆப்பிரிக்கா யானை...
ஆம்பளைங்க - பொம்பளைங்க குழிக்குள்ளதானே..!

பொழப்புன்னு ஒண்ணுயிருந்தா அதை ஒழுங்காப்பாரு
பொம்பளப் பின்னால சுத்தரத இனிமேலாவது நிறுத்து
உனக்குன்னு ஒருத்தி வராமலாப் போவா –
அதுவரைக்கும் பொறுத்து கரையேறு பாவா...!

எழுதியவர் : சாய்மாறன் (2-Mar-16, 4:37 pm)
பார்வை : 48

மேலே