ரசனை

உன்னால் ஒவ்வொன்றையும் ரசிக்க பழகினேன்...
அரை நொடியில் கடந்து போன
நிமிடங்களையும் மணிக்கணக்காய் மனதுற்குள்
போட்டு சித்ரவதை செய்து ரசித்து
கொல்கிறேன்.....!
பாவம் அந்த நிமிடங்கள் என்னிடம் மண்டியிட்டு
மன்றாடுகின்றன....
இருந்தும் மறந்துவிட மனமில்லை....
எந்த நிமிடங்களாக இருந்தால் என்ன......
உன்னால் ஒவ்வொரு நிமிடமும் சந்தனக் காற்றாய்
என்னை தீண்டிச் செல்கின்றன.
ம்ம்ம்ம்.... உன் மூச்சு, காற்றில்
கலந்ததால் என்னவோ.......!