நினைவெல்லாம் நீ

கண்கள் நான்கும் பேசிக்கொள்ளும் போது
ஏனோ வலுவிழந்து போகின்றன வார்த்தைகள் !
நகர மனமில்லாமல் நகர்ந்து போகிறாய் நீ ,
உன் நினைவலைகளை என்னைச் சுற்றி விட்டு விட்டு ! !
என் கண்கள் உலகைப் பார்க்க மறுப்பது நீ என் மனக் கண் முன் இருப்பதால் தானோ !
என் காதில் விழும் வார்த்தைகள் யாவும் உன் பெயராய் கேட்பது ஏனோ?
கொல்கிறாய் பெண்ணே , கொல்கிறாய் !
இரக்கமின்றி காதலாலே கொல்கிறாய் ! !
என் பேனா எழுதும் வரிகளில்,
மையோடு கலந்த வலிகளை,
நெஞ்சோடு சுமக்கிறேன் சுகமாக ! ! !

எழுதியவர் : அறிவரசன் (2-Mar-16, 6:58 pm)
சேர்த்தது : அறிவரசன்
Tanglish : NINAIVELLAM nee
பார்வை : 165

மேலே