சலாவு 55 கவிதைகள்

அயல் நாட்டு வாழ்க்கை,

பணம் பார்க்க வந்தோம் வெளிநாடு ..
சுயமரியாதை இழந்தோம் அடியோடு ..
பசி தாகம் எங்களுக்கு பகுதி நேரம் ..
செய்யும் வேளையில் தான் முழு கவனம் ..

அன்பு வைத்த எங்கள் இதயம் அல்லலுற்றவை ..
பாசம் வைத்த எங்கள் இதயம் பாவப்பட்டவை ..
சொல்லி முடியாது எங்கள் சோக துயரங்கள் ..

தூக்கம் தொலைந்த இரவுகள் எங்கள் ...
ஏக்கம் நிறைந்த கனவுகள் ..
அயல் நாட்டு அகதிகள் நாங்கள் ..
பாவப்பட்ட பாலைவன பூக்கள் ...
....................
........................சலா,

எழுதியவர் : (3-Mar-16, 12:00 pm)
சேர்த்தது : சலாவுதீன்
பார்வை : 51

மேலே