சலாவு 55 கவிதைகள்
மனைவி,
என்னிலிருந்தே ..
எனக்காக படைக்கப்பட்ட...
என்னவள் ..
என் உயிரோடு ஒன்றி உடல் வேறானவள் ..
என் உணர்சிகளோடு ஒன்றி உவமை மாறியவள் ..
மறுஜென்மம் மறுபிறவி ..
மனிதர்களுக்கு இல்லை ..
அனால் மனைவிகளுக்கு உண்டு ..
அவள் எப்பிறவியிலும் ..
என்னை தொடர்பவள் ..
நான் நோயுற்றால் மருந்த்தாவாள் ..
பசியுற்றால் விருந்தாவாள் .. என்னை ...
குழந்தையாக்கி கொஞ்சிடுவாள் ..
அரசனாக்கி அறிவில் மிஞ்சிடுவாள் ..
என்னிலிருந்தே..
எனக்காக படைக்கப்பட்ட ..
என்னவள் ...
மனைவி ...
.................................சலா,