காத்திருந்த தலைவியின் கூற்று

காத்திருந்த தலைவியின் கூற்று...

வெப்பம் தனியும் வேளையிலே
வெண்ணிதல் விரிமலர்ச் சோலையிலே
தலைவனை எண்ணிக் காத்திருந்தேன்
அவன்காதலை எண்ணிப் பூத்திருந்தேன்
சட்டென மாறிய காலநிலையே
கதிரவன் மறைந்த நிலையேனோ
காதலன் தாமதக் காரணமேனோ
அந்தி யாற்றங்கரை யோரத்திலே
அகன்ற அத்திமர நிழலிலே
என்னுள்ளம் கவர்க்கள்வன் நின்றிருந்தான்
எனைக்கள்ளப் பார்வையவன் பாரத்திருந்தான்
ஏனோ மறைந்த கதிரவன்
ஞாலம் ஒளிர்விக்கக்கண் திறந்தான்
எனைக் குளர்விக்கவவன் வாய்மொழிந்தான்
அவன் சொன்னதிலேயோர் காரணமில்லை
கயலினை யொத்தவேல் விழியாள்
கன்னல்சுவை கொண்ட தேன்மொழியாள்
நான்முத்த மிட்டுக்கன்னம் சிவக்கணுமே
சினத்தினில் கன்னம் சிவந்ததேனோ
என்றென்னைக் கொஞ்சி கன்னம்கிள்ளி
என்னிதல் மடல்மலர முத்தமி்ட்டானே
நாணத்தில் சிவந்திட்டேன் அல்லிநானே !
- செ.கிரி பாரதி.

எழுதியவர் : செ.கிரி பாரதி (3-Mar-16, 7:39 pm)
பார்வை : 110

மேலே