தெறிக்கட்டும் பொய்மை ~ சகா

மக்களே...!!!
அறியா மைஇருள்
அகற்றிவிட்டு...
வாய் மைஒளி
அகத்திலிட்டு...
நன் மைபயக்கும்
நன் தலைமை நமை ஆள...
நம் மைமயக்கும்
பொய்யரிடம் சாய்ந்திடாமல்...
கரிய மை
விரலில் இட்டு
காத்திடுங்கள்
தமிழகத்தை,
காலம் சொல்ல...!!!
ஒழியட்டும் ஊழல்
ஒலிக்கட்டும் உண்மை
தெரியட்டும் பலம்
தெறிக்கட்டும் பொய்மை என்று...!!!
கருப்பு பணத்தில்
கழுவி விடாதீர்கள்
உங்கள் கைகளை...!!!