என்ன விலை கவிதை

என் கவிதையில்
என்ன இருக்கிறது
என்று பார்க்காமல்,
எடை போட்டு
பார்க்கிறார்கள்,
கிலோ
பத்து ரூபாயாம்.

என் சுவையான
கவிதைகள்,
சுண்டல் மடிக்கவும்,
சூடான கவிதைகள்
பஜ்ஜி கட்டவும்,
கசங்கி கொண்டுஇருக்கிறது,
யாரேனும் படிக்கமாட்டார்களா,
என்று
தினமும்
டீ கடையில்.

எழுதியவர் : ரா.ஸ்ரீனிவாசன் (5-Mar-16, 1:45 pm)
பார்வை : 133

மேலே