தினம் ஒரு காதல் தாலாட்டு - பாடல் - 25

“ ஏ வாயாடி மங்கம்மா !
வீண் வம்பு ஏனம்மா !
எவனாச்சும் ஏமாளி
கிடைச்சாக்கா கோமாளி
ஆக்க நீ பாக்குற
அவன் பொழப்ப கெடுக்கிற !
ஏன் இந்த விளையாட்டு
எல்லாத்தையும் ஏறக்கட்டு ! “

குடுத்தனம் நடத்ததான்
உனக்கேத்த புருஷன்தான்
ஊருக்குள்ள ஒருத்தன்தான்
அவன் இந்த கிறுக்கன்தான் !

விளையாடும் வயதா உனது
விளையாடவா உன்னை உழுது
உழுது தழுவும் ஆட்டத்தால்
உருவாகும் செல்லக் கொழுந்து !

பெண்ணுக்கு அடக்கம்தான் அழகைவிட முக்கியம்
கண்ணுக்கு கண்ணாயதை கற்பைவிட காக்கனும்
மனசுக்கு புடிச்சதை செய்தால் மட்டும் போதுமா
பிறர் மனசுக்கு ஏத்தாற்போல நடப்பதில் பேதமா ?

வாய் வித்தால் உலகிலே வாழ்க்கை சிறக்காது
வாழ்வித்தால் நெஞ்சிலே வஞ்சனை பிறக்காது
நோன்பிருந்து என்னப்பயன் பிறர் நோகும்படி நடந்து...
வார்த்தைகளை விட்டப்பின்னே வாரியெடுக்க முடியாது

விளையாட்டாய் செய்யுமெதுவும் வினையில்தான்ப் போய்முடியும்
வினைகள் வந்தப்பின்னே வருத்தப்பட்டு அர்த்தமில்லே..!
கண்க்கொத்தி பாம்பாக வார்த்தைகளை காக்கவேண்டும்
இல்லாட்டி வாழ்க்கையிலே வெறுப்புத்தான் குப்பைப்போலே..!

தேளினும் கொடியது கொட்டுகின்ற கெட்ட வார்த்தை
தேனினும் இனியது அன்பென்ற நல்ல வார்த்தை
உன்னுயிரினும் மேலாக உலகோரை நேசி
உன்னையறியாமல் கிடைக்கும் பெரியோரின் ஆசி !

எழுதியவர் : சாய்மாறன் (5-Mar-16, 4:48 pm)
பார்வை : 66

மேலே