நாணம்
நாணம்
""""""''''''''''''
கோபத்தின்
அதிர்வு தோற்றுப்போகிறது
பிழைக்கான மன்றாடலில்!
கண்ணீரை கைகள் துடைத்தபோது பார்வைகளில்
கதையொன்றை
இதயம் எழுதுகிறது!
நாட்கள் சந்திப்புக்களில் நகர
பரிட்சயமான உறவாகமாறி
கையைபிடித்துக்கொண்டு
மௌனத்துடன் பின்தொடர்கின்றது!
பாதங்களின் நம்பிக்கை நகர்வில்
சருகுகள்முறிந்தழும். வேதனையை லாவகமாக கடந்து
நீண்ட நெடும்பயணத்தில் காதல்
பயணிக்கிறது.
மூச்சுமுட்டும் மோகத்தை !
இளமை வெளிக்காட்டாமல்
புன்னகையால் மறைத்திருந்தாலும்"""
இடையே வந்த நிலவு ஓளியில் கோலம்போட முயலும் உதட்டை கோவிக்காது சினுங்களுடன் பின்நகர்த்துகிறது புதிதாக
பூத்த நாணம்!!!