கல்லூரி நட்பு

கருவறை நம்மைக்
மழலையாக்கியது
கல்லூரி வகுப்பறைதானே
நம்மை மனிதனாக்கியது
இந்தி எதிர்ப்பு நடத்திய
தமிழகத்தில்
நாம் மட்டும் இந்தியர்களாய்
நட்புகொண்டோம் நம் அகத்தில்
வேற்று மொழி
மாற்று இனம்
நிறம் வேறு
நிலம் வேறு கொண்ட நம்மை
மாமன் மச்சான் ஆக்கியது
கல்லூரி நட்பு
வகுப்பறை சலித்த
நேரத்தில் நாம்
மாசாக வெளியேறினோம்
அனால்கூட தேர்வில்
பாசாகி வெளியேறினோம்
வீட்டில் சாதத்தைப்
பகிர்ந்துண்டோம்
தேர்வில் விடைத்தாளைப்
பகிர்ந்துகொண்டோம்
ஏழை பணக்காரனை
அருகருகே அமரவைத்தது
கல்லூரி நட்பு
பலருக்கு கல்வியையும்
சிலருக்கு காதலையும்
கற்றுக்கொடுத்தது
கல்லூரி நட்பு
கல்லூரி நட்பை
நினைக்க நினைக்க
ஏறிக்கொண்டே செல்கின்றது
மனதில் மகிழ்சிக் கலோரி ..