துணையாய் தொடரும் நிழல்கள்
விளையாட சென்ற மகன்
விவரமின்றி தொலைந்திடாமல் ;
வீதியிலே பார்வைபோட்டு
வீட்டு வேலை தொடர்கின்றாள் !
மனமுழுதும் மகிழ்ச்சியிலே
நண்பர்களோடு விளையாட ;
எனக்கொன்றும் ஆகிடாமல்
எனைதொடரும் என் தந்தை !
பருவ வயதை அடைந்ததாலே
பதற்றத்தோடு என் தந்தை -
மகன் கெட்டுப்போவானோ
மனமெல்லாம் குழப்பத்தில் ;
"என் வளர்ப்பு எப்படின்னு?"
எதார்த்தமாய் விசாரிப்பார் !
காதலித்த போதெல்லாம்
கவலையின்றி நான் இருந்தேன் ;
தூது அனுப்பி சொல்லிடுவாள்
"துயரம் போக்க நான் இருக்கேன்" !
தூணாய் இருப்பாள் என்றெண்ணி
துணையாய் நானும் தேர்ந்ந்தேடுக்க ;
நிழலாய் தொடர்கின்றாள்
நிம்மதியை கெடுக்கின்றாள் !
பக்கத்துக்கு வீட்டு பெண்களையும்
பகையாளியாய் ஆக்கிவிட்டு ;
வாசல் வந்து நின்றாலும்
வசவுகளை வாங்குகின்றேன் !