பூனைக்கு மணி

பூனை விரட்டிப் பிடித்தது
எலிக்குஞ்சு சிக்கியது
பூனை இறுமாப்பு!
பூனை விரட்டிப் பிடித்தது
மாட்டியது எலி
எலிக் குடும்பமே சோகம்!
பூனை வளர்த்தார்கள்
எலிகள் வெளியேற்றம்
வீட்டுக்காரர்கள் மகிழ்ச்சி!
பூனைக்கு மணி
எலிகளெல்லாம் பதுங்கின
பூனை நறநற!