வாழ்க்கையின்றி
இல்லையெனும் சொல்லின்பின்
ஒளிந்திருக்கும்
ஒரு பிரபஞ்சத்துக்கான
வெறுமை
விடியல் விழிப்புமுதல்
நகக்கொறிப்பு வரை
உனக்கெனதான
நினைவூட்டலான பின்
எதையென் வாழ்வெனச்
சொல்வது
பிரிவின் பின்
இதன் பின்னொரு நாளில்
நானிறக்கக் கூடும்
நிஜமாய்
அதுவரை
வாழ்வேன்
வாழ்க்கையின்றி