வீரத்தாய்க்குலம் வாழ்க வாழ்கவே

பன்மணி சலங்கையிட்டு
பவளமாய் அலங்கரித்து
பாவையாய்அழகுடனே
பக்குவமாய் பண்புடனே
பெண்ணியத்தின் பெருமை சேர்த்து
பெயர் பொறித்த பெண்ணியத்தின் நாளிது

அடுப்பங்கரைஅனலுடன் வேகி
அன்பாலும் அரவணைப்பாலும் மிளிர்ந்து
பரிவு கொண்ட பெருமைமிகு
தேன்தமிழ் மொழியாளின்
இனிமை பெரு நாளிது

பூங்கரத்தால் பூக்கொய்து
தன்கரத்தால் அதை சூடி
நன் மனம் வீச
நல்குலமாய் நடமாடிய
நங்கைகளின் தினமிது

அடக்கியாள அந்நியனின் அடாவடியை எதிர்த்து
ஆவேசமாய் கணையேந்தி
இனஅடிமை,பெண்ணடிமை போக்கி
காவலரனில் கண் விழித்து காக்கின்ற
எம் மினத்தமிழச்சிகளின்
தார்மிகு
நாளிது
தலை வணங்குகின்றது
தாய்மண்ணுமின்று

புதுமை பெண்ணாய்
புது வீரம் படைத்து
புறனானூற்றை விஞ்சிய வீரமாய்
வரமாயிரம் பெற்று வந்த
தாரகைகள் போல
வரும் பகையை எதிர்த்து
பெண்ணின் மகிமை சேர்த்து
வீரத்தாய்க்குலம் வாழ்க வாழ்கவே!

எழுதியவர் : மட்டுநகர் கமல்தாஸ் (7-Mar-16, 9:05 pm)
பார்வை : 101

மேலே