மகளிர் காதல்கள்

மனக்கிருக்களில் மதிகோணப்பிறந்த மகளிர்களின் காதல்கள்
வாழ்கைப்பரணில் தூசுதல்களோடு தொலைக்கப்பட்டுள்ளது.
மரப்பாச்சிக் கிளவியின் மனங்களை தூா்வார
துருப்பிடித்த தூண்களென வெளிறிய வண்ணங்களில்,
தோகைவிரித்தாடுகின்ற கலாபக் காதல்களை
என்றாவது தீயல் வாசனையோடு திருப்பிப்போடுவாள்,
மனக்கிறுக்கலில் மதிகோணிப்பிறந்த மகளிரின் காதல்களை.
எப்போதோ மாய்த்துப்போன காதலை இப்போது
உரைப்பதை முறைத்து விட்டு போகிறாள் மங்கை ஒருத்தி

எழுதியவர் : த.சிங்காரவேல் எ கவிமலரவன் (8-Mar-16, 4:34 pm)
பார்வை : 119

மேலே