பெரிய மனிதனாகி விட்டான்

பெரிய மனிதனாகி விட்டான்
அவளுடைய கடைசி மைந்தன்

பேச்சில் அளவு நடப்பில் வித்தியாசம்
சீற்றம் மிகும் போது கனல் தெறிக்கும் பார்வை

இது போல் என்றும் இல்லை அவன்
இப்போது வெகுவாக மாறி விட்டான்

வயது ஒன்று காரணமா அறியவில்லை
வாழ்க்கைத் துணையாலா புரியவில்லை

பாவம் விழிக்கிறாள் திரு திருவென்று
என்ன சொல்லி தேற்று வதோ தெரியவில்லை
முழிக்கிறேன்.

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (8-Mar-16, 5:28 pm)
சேர்த்தது : Meena Somasundaram
பார்வை : 67

மேலே