சனியம் பிடிச்சவன்

உன்ன ஏண்டா எல்லாரும் சனியம் பிடிச்சவன்னு திட்டறாங்க?

டேய் ஏழரை நாட்டு சனி ஒருத்தரை பிடிச்ச குறிப்பிட்ட காலத்திலே வெலகிப் போயிடும். ஆனா என்னப் பிடிச்ச சனி இரண்டு மடங்காப் பிடிச்சு இந்த பதினஞ்சு வருசமா என்ன ஆட்டி வைக்குது. வேல செய்யற எடத்திலே ஒழுங்கச் செய்யற வேலையே தப்பாப் போயி வம்புல மாட்டிக்கிறேன். பத்து வருசமா பொண்ணுத் தேடறாங்க யாருமே எம் மூஞ்சிப் பாத்தாலே பொண்ணுக் குடுக்க மறுக்கறாங்க. இப்பச் சொல்லு நா சனியம் பிடிச்சவந்தானே.

ஆடேங்கப்பா. நீ பதினஞ்சு நாட்டு சனி பிடிச்சவண்டா. உங்கூட பழகுனா அந்த சனி என்னையும் பிடிச்சுக்குண்டா. ஆள விடுறா சாமி நாந் தப்பிப் பொழச்சுக்கிறேன்

எழுதியவர் : மலர் (9-Mar-16, 7:42 am)
பார்வை : 227

மேலே